Latestமலேசியா

மெய்க்காவலர் ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்துவீர் – துங்கு இஸ்மாயில் கோரிக்கை

கோலாலம்பூர், மே 31 – தமது மெய்க்காப்பாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று கோலாலம்பூரிலுள்ள ஹோட்டல் ஒன்றில்  ஆபத்தான  செயலில்  ஈடுபட்டதாக  வெளியான  குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தும்படி அதிகாரிகளை    இடைக்கால ஜோகூர் சுல்தான்   Tunku Ismail Sultan Ibrahim  கேட்டுக்கொண்டார்.  

சட்டத்திற்கு  எதிரான எந்தவொரு  நடவடிக்கை அல்லது மிரட்டலை  தாம் ஒரு போதும்  அனுமதிக்க மாட்டேன் என    அவர் கூறினார்.  எனவே  எனது மெய்க்காவலர்களில் ஒருவர் ஆபத்தான   நடவடிக்கையில்    ஈடுபட்டதாக  கூறப்படுவது தொடர்பில்  முழுமையான விசாரணை நடத்தும்படி  அதிகாரிகளை    கேட்டுக்கொள்ளவதாக   Tunku Ismail   தெரிவித்தார்.  

 சட்டத்திற்கு ஏற்ப மற்றும்  பாதிக்கப்பட்டவருக்கு  நியாயம் கிடைப்பதற்கு  அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாக  x  சமூக வலைத்தளத்தில்   Tunku Ismail   பதிவிட்டார்.    இதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரண நடத்துவார்கள்  என்றும்  அவர் தெரிவித்தார். 

இந்த சம்பவத்தை அரச அமைப்புடன்  சம்பந்தப்படுத்தும் நடவடிக்கை நடைபெற்றுவருவதை  தாம்  உணர்ந்துள்ளதாகவும்   மற்றும் தமது பாதுகாப்புக்கு அப்பாற்பட்ட   பாதுகாப்பு   உறுப்பினர்களையும்    அரச அமைப்பையும்   இந்த விவகாரத்தில்  தொடர்புப்படுத்துவது நியாயமானதாக  இல்லையென்றும் அவர்  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!