Latest

மெர்டேக்கா 118 கோபுரம், இனி ‘மெர்டேக்கா மேபேங்க்’ ஆனது

கோலாலம்பூர், ஜூலை 28 – மேபேங் வங்கியின் (Maybank) புதிய தலைமையகமாக விளங்கும் மெர்டேக்கா 118 கட்டிடம், இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக ‘மெர்டேக்கா மேபேங்க்’ (Merdeka Maybank) என மறுபெயரிடப்பட்டுள்ளது.

மேபேங்கின் புதிய பதிவு செய்யப்பட்ட தலைமையக முகவரி, மெர்டேக்கா மேபேங்க் கோபுரத்தின் 70ஆவது தளமாக மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை, ஜாலான் துன் பேராக்கில் அமைந்துள்ள முன்னாள் மேபேங்க் தலைமையகமான மேபேங்க் கோபுரம், இனி ‘துன் பேராக் கோபுரம்’ (Menara Tun Perak) என அழைக்கப்படும்.

இரு கட்டிடங்களின் புதிய பெயர்களும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. மேலும், துன் பேராக் கோபுரத்தில் செயல்பட்டு வரும் கோலாலம்பூர் பிரதான கிளை வழக்கம்போல் தொடர்ந்து இயங்கும் என்றும், இந்தப் பெயர் மாற்றத்தால் வாடிக்கையாளர்களின் வங்கிச் சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் மேபேங்க் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!