Latestமலேசியா

மே 15 ; வருமான வரி வாரியத்தின் மின் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள்

புத்ராஜெயா, ஏப்ரல் 26 – LHDN எனப்படும் உள்நாட்டு வருமான வரி வாரியத்தின், 2023-ஆம் ஆண்டுக்கான வருமான வரி மின்-படிவத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, ஏப்ரல் 30-ஆம் தேதியிலிருந்து, மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை பெற்ற தனிநபர்கள் குறிப்பாக, அறிவுசார் அல்லது நிபுணத்துவ பணியாளர்கள், முக்கிய பதவிகளை வகிக்கும் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும், மற்றும் குடியுரிமை இல்லாத நபர்களுக்கும் அது பொருந்தும் என உள்நாட்டு வருமான வரி வாரியம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

அதே சமயம், அந்த கால கெடு நீட்டிப்பில், குடியுரிமை இல்லாத தனிநபர்கள் அறிவுசார் பணியாளர்களும், நிறுவனங்களும், தோட்டங்களும் மற்றும் அது சார்ந்த இந்துக் குடும்பங்களும் அடங்கும்.

லாபுவான் நிறுவன முதலாளிகள் மற்றும் லாபுவான் அல்லாத நிறுவன முதலாளிகள் ஆகிய பிரிவுகளுக்கான, 2023 மதிப்பீட்டு ஆண்டிற்கான மின்-படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, மார்ச் 31-ஆம் தேதியிலிருந்து மே 30-ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் மின் படிவங்களை முறையாக சமர்ப்பிப்பதன் வாயிலாக, வருமான வரியை செலுத்த முடியும் என்பதோடு, கூடுதல் தொகையையும் திரும்ப பெற முடியும். அதனால், அபராதத்தை தவிர்க்க முறையாக வருமான வரி படிவத்தை சமர்ப்பிப்பதோடு, சுய விவரங்களையும், வங்கி கணக்கு எண்ணையும் சரி பார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!