Latestமலேசியா

மைக்ரோபிளாஸ்டிக் பயன்பாட்டில் கவலையளிக்கும் வகையில் முதலிடம் வகிக்கும் மலேசியா

கோலாலம்பூர், ஜூன்-5 – 5 மில்லி மீட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் துகள்களான மைக்ரோபிளாஸ்டிக் பயன்பாட்டில், 109 நாடுகளில் மலேசியா முதலிடத்தில் உள்ளது என்று அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஒரு மலேசியர் சராசரியாக 502.3mg மைக்ரோபிளாஸ்டிக்ஸை சாப்பிடுகிறார் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியாவின் மைக்ரோபிளாஸ்டிக் பயன்பாட்டில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவை, மீன்களை உட்கொள்வதை உட்படுத்தியதாக அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பொதுவாக நன்னீர் மற்றும் கடல் சூழல்களில் காணப்படுகின்றன.

அவற்றை உயிரினங்கள் உட்கொண்டு, பின்னர் மனிதர்களால் அவை உட்கொள்ளப்படுகின்றன.

மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உள்ளிழுக்கும் முதல் 10 நாடுகளில் ஒன்றாகவும் மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு தனிநபர் ஒரு நாளைக்கு 494,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை நுகருகிறார்.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற விரைவாக வளர்ந்து வரும் தொழில்மய நாடுகள் உலகளவில் மைக்ரோபிளாஸ்டிக் அதிகரிப்பில் முதலிடம் வகிப்பதற்கு, அதிகப்படியான கடல் உணவு பயன்பாடே காரணம் என அவ்வறிக்கை கூறியது.

மைக்ரோபிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் சாத்தியமான பொது சுகாதார அபாயங்களைக் குறைக்க, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்காவில் வளரும் மற்றும் தொழில்மய நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் மேம்பட்ட நீர் சுத்திகரிப்பு மற்றும் பயனுள்ள திடக்கழிவு நிர்வகிப்பு முறையை அமுல்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!