
கோலாலம்பூர், செப்-30-இன்று காலை நிலவரப்படி, சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், நெகிரி செம்பிலான், பஹாங், மலாக்கா, திரங்கானு, பேராக் மற்றும் சரவாக் உள்ளிட்ட மாநிலங்களில் 33 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு API ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது.
சிலாங்கூர், Johan Setiaவில் API அதிகபட்சமாக 176 ஆக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் Cherasசில் 173 ஆக உள்ளது. நெகிரி செம்பிலான் நீலாய் (171), சிலாங்கூர் Shah Alam (170), ஜோகூர் Pasing Gudang (169), கோலாலம்பூர் Batu Muda (166), புத்ராஜெயா மற்றும் ஜோகூர் Larkin ஆகியவை 165 என்ற அளவில் பதிவாகியுள்ளது. நெகிரி செம்பிலான் சிரம்பான் (164), சிலாங்கூர் கிள்ளான் மற்றும் பஹாங் Indera Mahkotaவில் API 163 ஆக இருக்கிறது.
ஜோகூரில் Kota Tinggi (160), Pengerang (155), Batu Pahat (154), Tangkak (152), Kluang (131) மற்றும் Segamat (115) என பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற குறியீடுகள் பதிவாகின. மலாக்கா மாநகரில் (160), Bukit Rambai (156), Kuala Terengganu (157), Kemaman (154), Paka (152), Rompin (152), Seri Manjung (154), Serian IPD (140) ஆகியவற்றிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
101 முதல் 200 வரையிலான API அளவுகள் ஆரோக்கியமற்றதாக வகைப்படுத்தப்படுகின்றன. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசம் அல்லது இதயப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளவும், திறந்தவெளியில் இருக்கும்போது சுவாசக் கவசம் அணியவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.



