Latestமலேசியா

ம.இ.கா.வின் மூத்த அரசியல்வாதி டான்ஸ்ரீ ராஜுவின் நல்லுடல் இன்று ஈப்போ, புந்தோங்கில் தகனம்

ஈப்போ , மே 28 – ம.இ.காவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் பேரா மாநில ம.இ.காவின் முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ கோ. இராஜு வின் நல்லுடல் இன்று ஈப்போ , புந்தோங் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சிறிது காலமாகவே உடல்நலம் குன்றியிருந்த 86 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 24ஆம் தேதி காலமானார். இன்று நண்பகல் 12. 30 மணியளவில் ஈப்போ, ஜாலான் அப்துல் மனாப், லிம் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி சடங்கிற்குப் பின் புந்தோங் இந்து மயானத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்கேஸ்வரன் , தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், பொருளாளர் டான்ஸ்ரீ இராமசாமி, துணை அமைச்சர் எம். குலசேகரன், பேரா மாநில ஆட் சிக் குழு உறுப்பினர்.,
ஏ. சிவநேசன் மற்றும் ம.இ.கா தலைவர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்களும் திரளாக கலந்துகொண்டு அவரது நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய டான்ஸ்ரீ இராஜு தலைமையாசிரியராகவும் பணி புரிந்துள்ளார். செனட்டராக இருந்த டான்ஸ்ரீ  இராஜு,  ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 1990 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து மேலும் மூன்று தவனை ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதோடு பேரா ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். அனைவரிடமும் நட்பு பாராட்டி வந்த அவர் பேரா மாநிலத்தில் ம.இகாவின் வளர்ச்சிக்கும் , மாநில இந்தியர்களுக்கும் சிறந்த சேவையை வழங்கியுள்ளார் என பேரா ம.இ.காவின் தலைவர் டத்தோ இளங்கோ , முன்னாள் தலைமையாசிரிர் Shahul அமிட் மைடீன் உட்பட பலர் புகழாரம் சூட்டினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!