Latestமலேசியா

யானை தாக்கியதில் வனவிலங்குத்துறை ஊழியர் காயம்

கெமமான், மார்ச் 26 – திரெங்கானுவில் Felda Cherul லுக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் வனவிலங்குகளின் நடவடிக்கையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திரெங்கானு வனவிலங்கு பாதுகாப்புத்துறை மற்றும் தேசிய பூங்காவின் ஊழியர் ஒருவர் யானை தாக்கியதால் காயம் அடைந்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் 50 வயது மதிக்கத்தக்க அந்த ஊழியர் உடலின் பிற்புறம் மற்றும் நெஞ்சில் காயத்திற்கு உள்ளானார்.

திடீரென பின்னால் நகர்ந்த அந்த யானை அந்த ஊழியரை தாக்கியதோடு சில மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றதாக Cheneh தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலையத்தின் தலைவர் Mohd Hafiezul Mohamad தெரிவித்தார். இதனால் அந்த ஊழியர் எழுந்து நடமாட முடியாததால் காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஸ்டிரேச்சர் மூலமாக தூக்கி கொண்டு வரப்பட்டு Kemaman மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதாக Mohd Hafiezul கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!