Latestமலேசியா

‘யாரும் வந்தேறிகள் அல்ல; வேண்டுமென்றே அந்த பிரச்சனையை கிளப்பாதீர்’ – சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

சிலாங்கூர், டிச 10 – மலேசியாவில் யாரும் வந்தேறிகள் அல்ல என கூறியுள்ளார் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா.

இதனை அனைத்து ஆட்சியாளர்களும் உறுதி செய்திருப்பதோடு அனைவருமே மலேசியர்கள் என்ற அடிப்படையில்தான் பார்க்கப்படுவதாக அவர் கூறினார். இதுவே மலேசியாவின் சமூக ஒப்பந்தத்தின் முக்கிய கூறு எனக்கூறிய அவர், மலேசியாவின் நீண்ட கால வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் முக்கிய அம்சம் என்று விளக்கினார்.

மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் இந்நாட்டின் குடிமக்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், சில அரசியல்வாதிகள் சுய லாபத்திற்காக இப்பிரச்சனையை கிளப்பி வருவதை தாம் அறிவதாகவும் . ஸ்டார் நாழிதளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் சிலாங்கூர் சுல்தான் தெரிவித்தார்.

நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், நாட்டின் சுதந்திர பேச்சுவார்த்தைக்காக லண்டன் சென்றபோது, தனியாக செல்லாமல் இந்திய மற்றும் சீன பிரதிநிதிகளையும் சிலாங்கூர், பேராக் ஜோகூர் மற்றும் கிளந்தான் மந்திரி பெசார்களையும் அழைத்துச் சென்றதை மக்களுக்கு நினைவுறுத்தினார்.

மலாய்க்காரர்களை பொறுத்தமட்டில் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழியையும் இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாகவும் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட வேளையில், பிற இனங்கள் குடியுரிமையையும் தங்களின் அடையாளம், மொழி மற்றும் சமயத்தை சுதந்திரமாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதுவே சமூக ஒப்பந்தத்தில் கடைபிடிக்கப்படுகின்ற விட்டுக் கொடுக்கும் அம்சாகும் எனவும் சுல்தான் கூறினார்.

இந்த அடிப்படையில்தான் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டமும் வரையப்பட்டது.

அரசியல் காரணங்களுக்காக இன, சமய விவகாரங்கள் கிளப்பிவிடப்பட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் தரப்பினரை சுல்தான் கடுமையாக கண்டித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!