Latestஉலகம்சினிமா

ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்

இந்தியா, மே 2 – ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாகும் ‘கூலி’ படத்திற்கு எதிராக இளையராஜா அனுப்பி இருக்கும் நோட்டீஸ்தான் தற்போது தமிழ் சினிமா துறையில் சர்ச்சையான விவகாரமாகும்.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் ரஜினிகாந்த் நடித்து வருகின்ற ‘கூலி’ படத்தின் அறிமுக டைட்டில் டீசர், அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளது எனலாம்.

இதனிடையே, அந்த டீசரில் இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசை பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பாடலின் இசையை பயன்படுத்தி இருப்பதாக கூறி, ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இளையராஜா.

அதில் அனுமதி பெறாமல் பயன்படுத்திய அந்த பாடலின் இசையை நீக்க வேண்டும், இல்லையேல் அப்படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை பிரச்சனை தொடர்பாக சமீபகாலமாக இளையராஜா செய்து வரும் நடவடிக்கைகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!