![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-02-Apr-2024-07-07-PM-1907.jpg)
கோலாலம்பூர். ஏப் 2 – ரஷ்யாவில் Volgograd state மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் நீலாயைச் சேர்ந்த மாணவி வினோஷா ஷர்மனிக்கு இவ்வாண்டு முழுமைக்குமான கல்வி கடனுதவியாக எம்.ஐ.இ.டி 65,000 ரிங்கிட் வழங்கியது. இன்று ம.இ. கா தலைமையகத்தில் மாணவி வினோஷாவின் தாயார் வாசுகி வின்சனிடம் இந்த கடனுதவிக்கான காசோலையை ம.இகா கல்வி குழுவின் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் ஒப்படைத்தார். தற்போது நான்காவது ஆண்டாக மருத்துவம் பயிலும் மாணவி வினோஷாவின் கல்வி கடனுதவிக்காக ஏற்கனவே எம்.ஐ.இ.டி 35,000 ரிங்கிட் வழங்கியிருப்பதாக நெல்சன் தெரிவித்தார்.
இவ்வாண்டு 15,000 ரிங்கிட்டை மட்டுமே வினோஷாவின் தாயார் வாசுகி கேட்டிருந்தார். இப்போது இந்த தொகை கொடுத்தாலும் ஆண்டு இறுதியில் அவர் மேலும் 50 ,000 ரிங்கிட் கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதால் இவ்வாண்டு முழுமைக்குமான கட்டணமாக 65,000 ரிங்கிட் வழங்குவதற்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முன்வந்ததால் இந்த தொகை இன்று வழங்கப்பட்டதாக நெல்சன் கூறினார். இதனிடையே தமது மகளின் கல்விக்கு கடனுதவி வழங்கிய டான்ஸ்ரீ வினேஸ்வரனுக்கு வாசுகி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.