
கிள்ளான், ஆகஸ்ட் 13 – கிள்ளான் மாநகராட்சி மன்றமான MBDK நடத்திய நாய் பிடிக்கும் நடவடிக்கையில் ராக்கி என்ற செல்ல நாய் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய 24 வயதான ஷா ஹிசாம், எந்த விலங்குக்கும் தீங்கு விளைவிக்கும் அல்லது கொல்லும் நோக்கத்துடன் தான் அந்த நடவடிக்கையில் பங்கேற்கவில்லையென தெரிவித்துள்ளார்.
ஜூலை 29ஆம் தேதி போர்ட் கிள்ளானில் நடைபெற்ற அந்த நடவடிக்கையில், MBDK வழங்கிய பணியை நிறைவேற்றுவதற்காகவே தாம் பங்கேற்றதாக அவர் கூறினார்.
சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் தமக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
ராக்கியின் மரணம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2015ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் கீழ் சிலாங்கூர் கால்நடை சேவைத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.



