Latestமலேசியா

ரிங்கிட் நாணையப் பரிமாற்ற விகிதத்தை முடக்குமாறு கூகளை யாரும் வற்புறுத்தவில்லை, ஃபாஹ்மி விளக்கம்

கோலாலம்பூர், மார்ச் 23 – கூகள் நிறுவனம், ரிங்கிட் நாணைய பரிமாற்ற விகிதத்திற்கான தேடலில், MYR widget-டை முடக்கியிருப்பது, தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் ஒரு தற்காலிக நடவடிக்கையே.

மாறாக யாருடைய உத்தரவோ அல்லது நெருக்குதலினாலோ அல்ல என தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

மலேசிய ரிங்கிட் நாணைய பரிமாற்ற விகிதத்தைக் காட்டுவதில் இனியும் தவறு நிகழக் கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பதால், பேங் நெகாராவுடன் கலந்தாலோசித்தே கூகள் அம்முடிவுக்கு வந்திருக்கிறது.

கூகள் தரவுகளின் நம்பகத்தன்மை எந்நேரமும் உறுதிச் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து பேங் நெகாராவுடனான சந்திப்பில் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

திடீரென கூகளில் ரிங்கிட் பரிமாற்ற விகிதத்தைப் பார்க்க முடியவில்லை; இது யாரோ கொடுத்த உத்தரவு தான் என மறைமுகமாக அரசாங்கத்தை சாடும் வகையில் சில நெட்டிசன்கள் யூகங்கள் எழுப்பியது குறித்து ஃபாஹ்மி கருத்துரைத்தார்.

கூகளில், முன்னதாக டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் நாணையம் குறைவாக மதிப்பிடப்பட்டு, அது இணையத்தில் வைரலானது.

அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.98-டாக பதிவானதாக கூகள் தேடல் இயந்திரம் தவறான தகவலைக் காட்டியது.

இரண்டாவது முறையாக அத்தவறு நிகழ்ந்ததால், கூகள் கண்டிப்பாக அதற்குப் பொறுப்பேற்று விளக்கமளித்தாக வேண்டும் என மலேசிய அரசாங்கம் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!