கோலாலம்பூர், ஏப்ரல் 2 -வயதான காலத்தில் சாலையோரம் கால்கடுக்க நின்று laksa விற்றுச் சம்பாதித்தப் பணத்தை, யாரோ சொன்னார்கள் என்பதற்காக அத்தியாவசியமற்ற சிலுவாரை தாயின் செயலால் சினத்தில் பொங்கி தனது ஏமாற்றத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் Musytaq எனும் மகன் ஒருவர்.
நண்பரின் பேச்சைக் கேட்டு 800 ரிங்கிட் கொடுத்து அந்த ‘ஆரோக்கிய’ சிலுவாரை விலை கொடுத்து வாங்கியுள்ளார் அவரின் தாயார்.
அதைப் பார்க்க அப்படியொன்றும் சிறப்பானதாகத் தெரியவில்லை; சாதாரண Tight சிலுவாரைப் போலத்தான் உள்ளது; அது 800 ரிங்கிட ? என்பதே Musytaq-கின் கேள்வியாகும்.
உழைத்துச் சம்பாதித்த பணமல்லவா அது. 800 ரிங்கிட் என்பது சாதாரணத் தொகையா? இப்படி வீணாகி விட்டதே என வருத்தப்பட்ட Musytaq, தாயின் நண்பரை நினைத்தாலே கோபம் தலைக்கேறுவதாகச் கூறியுள்ளார்.
சிலுவாரை வாங்குவதோடு, மூன்று நண்பர்களையும் சேர்த்துவிட வேண்டுமாம். இது தெளிவாக ஒரு MLM திட்டம் என்பது தெரிகிறது எனவும் அவர் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
Musytaq-கின் கதையைக் கேட்ட நெட்டிசன்கள், அவரின் கோபம் நியாயமானதே என தற்காத்துப் பேசியுள்ள நிலையில், தாங்களும் அது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டிருப்பதாக பலர் கருத்து கூறியுள்ளனர்.