Latestமலேசியா

லுமுட்டில் இரு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் Fennec ஹெல்காப்டர் சரியான உயரத்தில் பறக்கவில்லை

கோலாலம்பூர், மே 30 – லுமுட்டில் இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் Eurocopter Fennec ரக ஹெலிகாப்டர், நிர்ணயிக்கப்பட்ட சரியான உயரத்தில் பறக்கவில்லை என்று அரச மலேசிய கடற்படையின் விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய விசாரணைக் குழு, இரு முக்கிய காரணங்களே அந்த விபத்திற்கு காரணம் என கண்டறிந்துள்ளது.

Fennec ஹெலிகாப்டர் நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு ஏற்ப பறக்கவில்லை மற்றும் Hom AW 139 ஹெலிகாப்டர் பறந்த வான்பகுதிதியில் Fennec ஹெலிகாப்டர் நுழைந்துள்ளது என கடற்படையின் தளபதி Admiral Tan Sri Abdul Rahman Ayob தெரிவித்தார்.

மேலும் HOM AW 139 ஹெலிகாப்டரைச் செலுத்தியவர் பயண வழித்தடத்தை மாற்றுவதில் கவனம் செலுத்தியதால் மற்றொரு ஹெலிகாப்டர் மோதுவதை தவிர்க்க தவறிவிட்டார் என்றும் அவர் கூறினார்.

அந்த இரண்டு ஹெலிகாப்டர்களை செலுத்தும் ஆற்றலில் கடற்படைக் குழுவினர் பொருத்தமாக இருந்தனர்.

இரண்டு ஹெலிகாப்டர்களின் இடிபாடுகளையும் நாங்கள் முழுமையாக ஆய்வு செய்துள்ளோம். மேலும் அந்த இரு ஹெலிகாப்டர்களிலும் இயந்திர கோளாறுகள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டதாக Abdul Rahman தெரிவித்தார்.

ஹெலிகாப்டர்களில் இருந்த கடற்படை வீரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருந்தனர் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றினர் என்று இன்று லுமுட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்திற்கு உள்ளானது குறித்து விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட்டபோது Abdul Rahman தெரிவித்தார்.

இந்த விசாரணைக் குழுவில் ஹெலிகாப்டர் மற்றும் அத்துறையில் பொறியியலில் நிபுணத்துவம் பெற்ற ஒன்பது கடற்படை அதிகாரிகள் இருந்தனர். மேலும் விமானப் படையின் பொது தொழிற்நுட்ப பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை மருத்துவர்களிடமிருந்தும் உதவி பெற்றதாகவும் அவர் கூறினார்.

ஏப்ரல் 23ஆம் தேதியன்று கடற்படையின் 90ஆவது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டத்தில் இணைந்து பறக்கும் பயணத்திற்கான மூன்றாவது ஒத்திகையை நடத்தும் போது கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் லுமுட்டில் விபத்துக்குள்ளானதில் 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!