Latestமலேசியா

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பில் துன் டாய்ம் தாக்கல் செய்த நீதித்துறை சீராய்வு மனுவில் அன்வார் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஜூன் 11 – தங்களது வங்கிக் கணக்கு முடக்கியுள்ள MACC க்கு எதிராக டாய்ம் ஜைனுடின் , ( Daim Zainudin ) அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட 18 நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள நீதித்துறை சீராய்வுக்கான வழக்கு மனுவில் பிரதிவாதியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. Daim மிற்கு எதிராக தமது தனிப்பட்ட சுயநல நோக்கத்தை அன்வார் முன்னெடுப்பதற்கு Macc யில் தனது செல்வாக்கை அவர் பயன்படுத்தியுள்ளார் என அவர்கள் அந்த வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் சட்டவிரோத பண பறிமாற்ற சட்டத்தின் 44 ஆவது விதி உட்பிரிவு (1) இன் கீழ் மற்றும் 2001 ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான வருமான சட்டத்திக் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி சொத்துக்களை முடக்கும் MACC உத்தரவுக்கு அன்வாரின் செல்வாக்கு இருந்ததாக டைய்ம் குடும்பத்தினர் அந்த வழக்கு மனுவில் தெரிவித்துள்ளனர்.

அந்த உத்தரவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவதியாகிவிட்ட போதிலும் தங்களுக்கு எதிராக சட்டவிரோத பண பராமரிப்பு குற்றச்சாட்டு எதுவும் கொண்டுவரப்படவில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எங்களது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு வங்கிகளுக்கு பணிக்கப்பட்டதா என்பது குறித்து தெளிவு படுத்தும்படி இவ்வாண்டு தொடக்கத்தில் MACC க்கு கடிதம் எழுதப்பட்டபோதிலும் அவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அதோடு சொத்துக்கள் பறிமுதல் செய்யும் விசாரணைக்கான சட்டவிரோத பண பறிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டு என்ன என்பது குறித்த விளக்கத்தையும் MACC தரப்பு தெரிவிக்கவில்லை. மேலும் தீய நோக்கத்தோடுதான் தனிப்பட்ட மற்றும் நிறுவன கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் டைய்ம் குடும்பத்தினர் தெரிவித்தனர். எனவே அந்த உத்தரவை ரத்துச்செய்வதற்கான நீதித்துறை சீராய்வு மனு பரிசீலிக்கப்படவேண்டும் என டைய்ம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனு மீதான அவர்களைது விசாரணையை ஜூன் 12 ஆம்தேதி நீதிமன்றம் செவிமடுக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!