Latestஇந்தியாஉலகம்

வயது ஒரு தடையல்ல; 71 வயதில் 11 வாகனங்கள் ஓட்டும் பெண்மணி

நியூ டெல்லி, மார்ச் 13 – பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்தாலும் ஒரு சில துறைகளில் குறைந்த அளவிலேயே உள்ளனர். அதிலும் கனரக வாகனங்களை ஓட்டுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடும் நிலைதான் இருக்கிறது.

ஆனால், கேரளாவை சேர்ந்த ராதாமணி என்பவர் தமது 71 வது வயதில் 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமம் பெற்று அசத்தி இருக்கிறார்.

அவரது கணவர் தான் ராதாமணியை வாகனம் ஓட்டி பழகுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன் பின்னர், படிப்படியாக ஒவ்வொரு வாகனங்களை ஓட்டுவதற்கு பழகி, ஓட்டுநர் உரிமமும் பெற தொடங்கி இருக்கிறார்.

இருவரும் இணைந்து கேரளாவில் முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளியையும் தொடங்கியுள்ளனர். இருப்பினும், 2004 ஆம் ஆண்டில் அவரின் கணவரின் மறைவிக்கு பின், இவரே அந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்று கொண்டு இன்றும் நடத்தி வருகிறார்.

நம்பிக்கையுடனும் விருப்பதுடனும் வாகனத்தை ஓட்டினால், பயமின்றி செலுத்த முடியும் என்று பலருக்கும் இவர் ஊக்கமளித்து பயிற்சி வழங்கி வருகிறார்.

ஓட்டுநர் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இவர், தற்போது இயந்திர பொறியியல் துறையில் பட்டயக்கல்வியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!