
ஷா ஆலம், ஜூலை 10 – முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டுமானங்கள் மேம்படுத்தப்படாவிட்டால் , சிலாங்கூர் அரசாங்கம் அதற்கான ஒப்புதல் அனுமதியை இரத்து செய்து விடுமென்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி திரும்பப் பெறப்பட்ட அந்த நிலங்கள், தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்று மாநில உள்ளாட்சி மற்றும் சுற்றுலாக் குழுத் தலைவர் இங் சூயி லிம் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு சுமார் 400 நிலங்களை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட வழிபாட்டு நிர்வாக குழுவினர்கள் இனியும் தாமதப்படுத்தாமல் கட்டுமான பணிகளை உடனே தொடங்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.