
கோம்பாக், நவம்பர் 2 – தாமான் ஸ்ரீ பத்து கேவ்ஸிலுள்ள, வாகனங்களுக்கு சாயம் பூசும் பட்டறை ஒன்று நேற்றிரவு தீக்கிரையானது.
சம்பவத்தின் போது அந்த பட்டறையில் இருந்த நான்கு வாகனங்கள் சேதமடைந்தன. அதில் ஆடம்பர மெர்சிடிஸ் பென்ஸ் ரக கார் ஒன்றும் அடங்கும்.
அந்த தீ விபத்து குறித்து, இரவு மணி 11.03 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் தெரிவித்தார்.
தீயில் 70 விழுக்காட்டு பட்டறை சேதமடைந்தது. பின்னிரவு மணி 2.01 வாக்கில் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.