Latestஇந்தியா

விஜயை தொட நினைத்தாலே சேதாரம் தான்; ரசிகர்கள் கூட்டத்தில் நொறுங்கிய கார்

கேரளா, மார்ச் 19 – கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவுக்கு சென்ற நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிறாக விஜய் நேற்று கேரளா சென்றுள்ளார்.

விஜய்யை நேரில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடி இருந்த நிலையில், அவரின் கார் ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்துதான் ஹோட்டல் வரை சென்றுள்ளது.

இந்நிலையில், ரசிகர்கள் காரை சூழ்ந்து வந்து நெருக்கியத்தில் கண்ணாடி உடைந்து நொறுங்கி இருக்கிறது.

காரின் கண்ணாடி உடைந்து, கதவுகள் நசுங்கி என விஜய் வந்துள்ள கார் சேதமாகியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரல் ஆகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!