Latestஉலகம்

விண்வெளியில் இரவு உணவு; டிக்கெட் விலை RM2,370,000,000

அமெரிக்கா, மார்ச் 20 – விண்வெளி சுற்றுலா நிறுவனம் ஒன்று விண்வெளிக்கு அழைத்துச்சென்று, நட்சத்திரங்களுக்குக் கீழே இரவு உணவை வழங்க முன்வந்துள்ளது.

சொகுசு விண்வெளி-சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றான SpaceVIP இதனை அறிவித்திருக்கிறது.

நெப்டியூன் விண்கலத்தில் புவி சுற்றுப்பாதையின் விளிம்பிற்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு இரவு உணவு சாப்பிடுவார்கள் என்று கூறியுள்ளது அந்நிறுவனம்.

இந்நிலையில், விண்வெளியில் இரவு உணவு உண்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்பதோடு டிக்கெட்டின் விலை 500$ மில்லியன் டோலர் அதாவது RM 2,370,000,000 ரிங்கிட் மட்டுமே என அறிவித்துள்ளது SpaceVIP நிறுவனம்.

2025 இறுதிக்குள் இதற்கான பணி தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!