Latestமலேசியா

விநாயகம் கடத்தப்பட்டு கொலை தொடர்பில் குடும்பத்தினர் புதிய ஆதாரங்களை சுஹாக்காமிடம் சமர்ப்பித்தனர்

கோலாம்பூர், நவ 24 – விநாயகம் ஜெகநாதன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பில் விசாரணைக்காக அவரது குடும்பத்தினர் புதிய ஆதாரங்களை சுஹாக்காம் எனப்படும் மனித உரிமை ஆணையத்திடம் இன்று சமர்ப்பித்தனர்.

அதோடு விநாயகம் கொலையில் நீடித்துவரும் மர்ம முடிச்சியை அகற்றுவதற்காக புதிய போலீஸ் புகாரையும் செய்யவிருகின்றனர். மேலும், புதிய சந்தேகப் பேர்வழி ஒருவரின் பெயரையும் சமர்ப்பிக்கப் போவதாக அந்தகு டும்பத்தின் சார்பில் இன்று சுஹாக்காம் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அரசு சார்பற்ற இயக்கத்தைச் சேர்ந்த அருண் துரைசாமி தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் விநாயகத்தின் தாயார் சுமதி கோபால் மற்றும் , விநாயகத்தின் சதோதரி மலர் ஆகியோரும் கலந்துகொண்டனர். விநாயகம் கொலை தொடர்பாக தங்களது விசாரணையில் 9 தனிப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்போதும் அதன் பிறகு எந்த மேல் விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லையென அவர் கூறினார்.

32 வயதான விநாயகம் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் தமது காரிலிருந்து கடத்தப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிர்வண நிலையில் சிலாங்கூர் ,உலுயாம் சாலையோரத்தில் மீடக்கப்பட்டது.

இதனிடையே தனது ஒரே மகனை பறிகொடுத்த வேதனையில் இருக்கும் தமக்கு இன்றுவரை போலீசாரிடம் எந்தவொரு தகவலும் கிடைக்காமல் இருப்பது குறித்த பெரும் வேதனை மற்றும் ஏமாற்றத்தில் இருப்பதாக திருமதி சுமதி கோபால் வணக்கம் மலேசியாவிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனிடையே விநாயகம் கொலை தொடர்பான விசாரணையில் கோம்பாக் மற்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளின் மெத்தன போக்கின் காரணமாகவே தாங்கள் சுஹாகாமின் உதவியை நாடியிருப்பதாக விநாயகம் நடவடிக்கை குழுவின் தலைவருமான அருண் துரைசாமி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் புதிய பல தகவல்களை வழங்குவதற்கும் விநாயகம் குடும்பத்தினர் தயாராய் உள்ளனர். எனவே போலீசார் மீண்டும் தங்களது விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என அருண் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!