Latest

விபச்சாரம், விசா விதிமீறல் குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் ஆஜரான மூன்று வியட்நாம் பெண்கள்

பத்து பஹாட், ஜூலை 20 – விபச்சாரத்தில் ஈடுபட்டதுடன், சமூக வருகைப் பாஸ் (Social Visit Pass) விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று வியட்நாம் பெண்கள் இன்று பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவர்களுக்கு மலாய் மற்றும் ஆங்கில மொழிகள் புரியாததால், குற்ற ஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூலை 15 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில், ஜாலான் பாக்காவ் சோன்டோங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் விபச்சாரத்திற்காக வாடிக்கையாளர்களைத் தேடியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், சமூக வருகைப் பாஸ் விதிமுறைகளை மீறி விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!