
ஹனோய், ஜூலை-12 – வியட்நாமின் புகுவோக் (Phu Quoc) தீவு அருகே இந்தியச் சுற்றுப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில், 2 பெண்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சனிக்கிழமை மதியம் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
Hon May Rut Ngoai தீவில் இருந்து An Thoi துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கடுமையான கடல் அலை மற்றும் பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படகில் 32 இந்தியச் சுற்றுப் பயணிகள் உட்பட மொத்தம் 36 பேர் பயணம் செய்துள்ளனர்.
உயிரிழந்த 15 பேரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், மூவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், மற்றும் இருவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 21 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.



