Latestமலேசியா

விரைவில் குணமடைந்து இல்லம் திரும்புவேன் ஐ.ஜே. என்னில் இன்னமும் சிகிச்சை பெற்றுவரும் – மகாதீர் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 12 – ஜனவரி மாதம் தொற்றின் பாதிப்புக்குள்ளான முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மாகதீர் முகமட் கோலாலம்பூரிலுள்ள IJN எனப்படும் தேசிய இருதய சிகிச்சை பிரிவில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். எனது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நான் நலம் பெறுவதற்கு பிரார்த்தனை செய்தவர்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவரும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் IJN பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக X தளத்தில் 98 வயதுடைய மகாதீர் பதிவிட்டுள்ளார். விரைவில் முழுமையாக குணமடைந்து இல்லம் திரும்புவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மகாதீர் IJN னில் அனுமதிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!