Latestமலேசியா

விலை உயர்வை கண்காணிக்க களத்தில் இறங்குவீர் அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

புத்ராஜெயா, ஏப் 3 – பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருட்களின் தரத்தை அறிந்துகொள்வதற்கு சந்தையில் நிலைமையை நேரடியாக கண்டறிய களத்தில் இறங்கும்படி அமைச்சரவையைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்தாக தொடர்பு துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

அனைத்து அமைச்சர்களும் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு நிலையை தாங்கள் நேரடியாக பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். இதற்கு முன் தாம் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் நேடியாகவே விலைவாசி உயரவு மற்றும் வாழ்க்கை செலவின உயர்வு பிரச்சனையை தெரிந்து கொண்டுள்ளதால் அமைச்சர்களும் நிலைமையை நேரடியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இதனை ஓர் ஆலோசனையாக பிரதமர் தெரிவித்திருக்கிறார் என Fahmi கூறினார்.

அண்மையில் பெர்லிஸில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அன்வாரின் தொடர் வருகையின் போது ஒரு பெண் அவரைக் கண்டித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. 22 வினாடிகள் கொண்ட அந்த காணொளியில் , சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதைப் பற்றி அந்தப் பெண் அன்வாரிடம் புகார் அளித்ததையும் வெளிப்படுத்துவதையும் காணமுடிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!