Latestஉலகம்

விளையாட்டு வினையானது: காரை நீச்சல் குளமாக்கிய கேரள You Tuber மீது நடவடிக்கைப் பாய்ந்தது

கேரளா, ஜூன்-3 – நடிகர் ஃபஹட் ஃபாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ படத்தில் இடம் பெற்ற காட்சியைப் போல் தனது காரையே நீச்சல் குளமாக மாற்றிய கேரள ‘You Tuber Sanju Techy’ மீது நடவடிக்கைப் பாய்ந்துள்ளது.

ஆபத்தான முறையில் வாகனமோட்டியது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டதில், சஞ்சு மற்றும் அவரின் 3 நண்பர்களுக்கு கேரள போக்குவரத் துறை சமூக சேவை தண்டனை விதித்துள்ளது.

கேரள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வார காலத்திற்கு சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பதோடு, அத்துறையின் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிமைப் பொறுப்புப் பற்றியும் சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம், சம்பவத்தின் போது வாகனமோட்டிய நபரின் வாகனமோட்டும் உரிமமும் ஓராண்டுக்கு அதிரடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Sanju-வும் அவரின் நண்பர்களும் முன்னதாக Tata Safari காரின் பின்பகுதியில் நீச்சல் குளத்தை உருவாக்கி, இளநீர் குடித்துக் கொண்டு அதில் கும்மாளம் போட்டுக் கொண்டே பரபரப்புமிக்க சாலையில் காரை ஓட்டிச் சென்றதை 18 நிமிட வீடியோவாக வெளியிட்டனர்.

வீடியோவும் அவர்கள் எதிர்பார்த்தபடியே வைரலானது.

ஆனால், அந்த ‘நடமாடும் நீச்சல் குளத்தில்’ இருந்து தண்ணீர் வெளியாகி ஓட்டுநர் இருக்கை மற்றும் எஞ்சின் மீதும் கசிந்ததால், சாலை நடுவே காரை நிறுத்தி, கதவைத் திறந்து தண்ணீரை வெளியேற்றியதில் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது நெட்டிசன்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தி, அதிகாரத் தரப்பின் காதுகளுக்கும் எட்டிய நிலையில், தற்போது நடவடிக்கைப் பாய்ந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!