Latestமலேசியா

வீடு ஒன்றில் மின்னல் தாக்கிய சம்பவம்; காணொளி வைரல்

கோலாலம்பூர், ஏப் 1 – வீடு ஒன்று மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நேற்று முதல் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடமைப்பு பகுதி வழியாக கடந்து சென்ற வாகனத்தின் டெஸ்போர்ட்டில் உள்ள கேமராவில் அந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமையன்று தனது அண்டை வீட்டில் இந்த சம்பவம் நடந்ததாக nurul ilmi91 என்பவர் தமது Tik Tok வலைத்தலதில் பதிவிட்டுள்ளார். எனினும் மின்னல் தாக்கியபோது அவ்வீட்டில் எவரும் குடியிருக்கவில்லை. இந்த சம்பவத்தினால் அவ்வீட்டில் தேம் ஏற்பட்டதாகவும் அந்த Tik Tok கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போது மழைக்காலம் என்பது உறுதியில்லாமல் இருப்பதால் வழக்கமாக மின்னல் ஏற்படும் பகுதிகளில் விழிப்பாக இருக்கவேண்டும் . பாதுகாப்பை கருத்திற்கொண்டு வீட்டிலேயே இருப்பதே சிறப்பு என அந்த TiK ToK புகைப்படத்திற்கு கீழே விளக்கம் எழுதப்பட்டுள்ளது.

அந்த காணொளியை பார்த்த பல நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்ததோடு தங்களது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர். நல்ல வேளையாக சம்பவம் நடந்தபோது அந்த வீட்டில் எவரும் இல்லையென Nur என்பவர் தெரிவித்துள்ளார். என் வீட்டில் முன்பே இதேபோன்று மின்னல் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது, மின்னியல் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன என Faten என்ற நெட்டிசன் தெரிவித்தார். முன்பு ஒரு முறை இதே போன்ற சம்பவத்தில் ஐஸ் பெட்டியை தவிர , அஸ்ட்ரோ, சலவை இயந்திரம் தொலைக்காட்சி போன்றவற்றின் பிளாக்குகளை கழற்றியிருந்தபோதிலும் மின் விளக்குகள் உட்பட அனைத்து மின்னியல் சாதனங்களும் சேதம் அடைந்தததாக Rohahanie என்பவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!