Latestமலேசியா

வெப்பமான வறண்ட வானிலை; ஏப்ரல் தொடக்கத்தில் தணியும் என எதிர்பார்ப்பு

கோலாலம்பூர், மார்ச் 25 – நாட்டில் தற்சமயம் நிலவும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலை, அடுத்த மாத தொடக்கத்தில் ஏற்படவுள்ள பருவநிலை மாற்றத்தின் போது, தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு திசையிலிருந்து, பருவமழை காற்று தென்மேற்கு திசைக்கு மாறும்போது வெப்ப நிலை தணியும் என எதிர்பார்க்கப்படுவதாக, தேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் இயக்க மைய இயக்குனர் மக்ருன் பட்ஸ்லி முஹமட் பாஹ்மி தெரிவித்தார்.

பருவமழை மாறும் காலகட்டத்தில், பொதுவாக பிற்பகல் வாக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

எனவே, தற்போதுள்ள வெப்பமான வறண்ட வானிலை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர், ஏற்படும் மழை பொழிவு, தற்போதைய உயர் வெப்ப நிலையைப் போக்க உதவுமென தமது தரப்பு நம்புவதாக, மக்ருன் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!