Latestமலேசியா

வெறுப்புணர்வு, இன துவேச பேச்சுக்கள் வேண்டாம் புஞ்சாக் போர்னியோ எம்.பி வில்லி மோங்கின் கோரிக்கை

கோலாலம்பூர். நவ 8 – மலேசியாவுக்கு நன்மையைக் தேடித்தாரத விவகாரங்களை எழுப்புவதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென டி சரவா புஞ்சாக் போர்னியோ நாடாளுமன்ற உறுப்பினர் வில்லி மோங்கின் கேட்டுக்கொண்டார். எந்தவொரு தரப்பினரையும் மற்றவர்களை ‘Kafir’ எனப்படும் சமய நம்பிக்கையற்றவர்கள் என்றோ, துரோகி என்றோ , அவர்கள் நல்லவர்கள் இல்லை மற்றும் இவர்கள் நல்லவர்கள் இல்லையென எவர் மீதும் முத்திரை குத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வில்லி மோங்கின் வலியுறுத்தினார். வெறுப்புணர்வை தூண்டக் கூடிய வார்த்தைகளை கூறுவதையும் மற்றவர்களுக்கு எதிராக அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவதையும் நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

எந்தவொரு நாட்டிலும் ஒரு தரப்பினர் பெரும்பான்மையாக இருந்தாலும் அல்லது சிறுபான்மையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வர்த்தைகள் அழிவையே கொண்டு வரும். சபா, சரவா மற்றும் தீபகற்பத்தை இணைத்துதான் நாம் மலேசியாவை உருவாக்கியுள்ளோம். இந்த நாடு மலர்ய்க்காரர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. சரவாக்கில் என்னைப் போன்ற கடசான் மக்கள் பெரும்பான்மையாக இருந்து வருகிறோம். அப்படியொன்றால் மலேசியாவின் மூன்றில் ஒரு பகுதி டயாக் மக்களாகிய எங்களுக்கு சொந்தமானதாகும் என நான் கூறமுடியும். எனவே நாட்டிற்கு பயன் தரக்கூடிய விவகாரங்களை மட்டுமே பேச வேண்டுமென வில்லி மோங்கின் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!