Latestஉலகம்

வெள்ளை மாளிகைக்கான முயற்சியை நிக்கி ஹேலி கைவிட்டார்; அதிபர் பதவிக்கு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியானது

சார்லஸ்டோன், மார்ச் 7 – அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான தேர்வில் கடும் போட்டியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கி ஹாலி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் நடப்பு அதிபரான ஜனநாயகக் கட்சியின் Joe Biden-னுடன் நேரடியாக மோதும் குடியரசு கட்சியின் வேட்பாளர் என்பதை Donald Trump உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார். தென் கரோலினா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், ஐநாவிற்கான Donald Trump பின் முன்னான் தூதராகவும் பணியாற்றியுள்ள ஹாலி , செவ்வாய்க்குப் பிறகு ஒரு நாள் கழித்து விலகும் முடிவை அறிவித்தார்.

குடியரசு கட்சிக்கான வேட்பாளர்ளுக்கான போட்டியில் 15 இடங்களில் 14 இடங்களில் டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிபர் பதவிக்கான கனவிலிருந்து ஹாலி பின்வாங்கினார். தென் கரோலினாவில் சார்லஸ்டன்னில் ஆற்றிய உரையின் போது, “எனது பிரச்சாரத்தை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று ஹாலி தமது ஆதரவாளர்களிடம் கூறியதோடு இதனால் தமக்கு எந்தவொரு வருத்தமும் இல்லையென்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!