Latestஉலகம்

வேலைக்காரரைப்போல மாணவர்களை நடத்திய சீன விரிவுரையாளர் பணி நீக்கம்

பெய்ஜிங், மே 2 – மாணவர்களை வேலைக்காரர்களைப்போல வேலை வாங்கிய சீனாவை சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இணைப் பேராசிரியான Zheng Feng எனும் அந்த விரிவுரையாளின் மேல் 15 பல்கலைக்கழக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

அப்புகார்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படவே, பலரின் கண்டனத்தைப் அது பெற்றது.

மாணவர்களை காலை உணவு வாங்கி வர பணித்தல், வீட்டை சுத்தம் செய்தல், பொருட்களை எடுத்துக் கொடுத்தல், அவரின் குடும்ப உறுப்பினர்களை நினைக்கும் இடத்திற்கு அழைத்து செல்லுதல், பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்தல் என பல்வேறு வேலைகள் இந்த விரிவுரையாளரால் பணிக்கப்படுள்ளது.

இதனிடையே, மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு மிகக் குறைவான வழிகாட்டுதலை வழங்கிய அவர், 10 மணி நேரத்திற்கு மேலாக வகுப்பில் இருக்குமாறும், இரவு 10 மணிக்கு மேல் சந்திப்புகளுக்கு இணையுமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வீண்வாதம் செய்யும் மாணவர்களை ஆராய்ச்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மிரட்டியுள்ளார் அந்த விரிவுரையாளர்.

இவரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தாங்கள் அடிமைகள்போல நடத்தப்பட்டதாகவும், இதனால் மனநல பிரச்சனைகளுக்கும் ஆளாகியிருப்பதாக கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து, அந்த விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!