Latestமலேசியா

வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் மோசடி கும்பலிடம் பாதிக்கப்பட்டோர் 600,000 ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தனர்

கோலாலம்பூர், ஜூன் 6 –  வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி வழங்கிய இணைய வேலை வாய்பு கும்பலின் மோசடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் 600,000 ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தனர். அக்கும்பலுக்கு எதிராக இதுவரை 19 புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் (Ramli Mohamed Yoosuf) தெரிவித்திருக்கிறார். ஹோட்டலில் Booking agent பணிக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி அந்த கும்பல் ஏமாற்றியுள்ளது.

இந்த வேலை வாய்ப்பில் கவர்ச்சிகரமான வருமானம் இருப்பதாக உறுதியளித்து ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் வங்கிக் கணக்கை திறக்கும்படி வலியுறுத்தி அவர்களை ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்திருப்பதாக ரம்லி கூறினார். இந்த விவகாரம் குறித்து குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கும் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்குவதாக அக்கும்பல் இணையத்தில் விளம்பரப்படுத்தி அவர்களையும் மோசடி செய்திருப்பதும் தெரியவந்திருப்பதாக ரம்லி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!