Latestமலேசியா

வேலை வாய்ப்பு மோசடி திட்டம்; பாதிக்கப்பட்ட 121 மலேசியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர்

சிப்பாங், டிச 1 – வேலை வாய்ப்பு மோசடி திட்டத்தினால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கிக்கொண்ட 121 மலேசியர்கள் மீட்கப்பட்டு நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர், அண்மையில் கலவரத்திற்கு உள்ளான மியன்மாரின் லாவ்க்கிங் வட்டாரத்தில் மோசடித் திட்டம் ஒன்றில் அந்த மலேசியர்கள் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. சீனாவின் குன்மிங் வழியாக 121 மலேசியர்களும் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக வெளியுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அலாமின் தெரிவித்தார். முதலில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் மியன்மார் அதிகாரிகள் 26 மலேசியர்களை மீட்டனர். அதன் பின்னர் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் 128 மலேசியர்கள் அடையாளம் கண்டு மீட்கப்பட்டதாக முகமட் அலாமின் கூறினார். அவர்களில் தற்போது 121 பேரை மீட்டு மலேசியாவுக்கு கொண்டுவந்துள்ளோம் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!