Latestமலேசியா

ஷா அலாமில் Sungai Kandis ஆற்று நீர் நீல நிறமாக காட்சியளித்தது: சாயம் கொட்டப்பட்டதா?

ஷா அலாம், ஜூன் 2 – ஷா அலாம் Jalan Omboh தொழில்மயப் பகுதியில் சாயம் கொட்டப்பட்டதாக நம்பப்படுவதால் Sungai Kandis ஆற்றில் நீரோட்டம் நீல நிறமாக காணப்பட்டது. இதற்கு முன்னதாக நண்பகல் 12.30 மணியளவில் கிள்ளான் jalan Selathevan பகுதியில் உள்ள அந்த தொழிற்சாலை மேற்கொண்ட நடவடிக்கை தெரியவந்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு Luas எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக ஆணையகத்தின் அதிகாரிகள் சென்றனர். ஆற்று நீர் நீல நிறமாக இருந்ததற்கான காரணத்தை கண்டறிவதற்காக Luas விசாரணை நடத்தியது.

அந்த பகுதியில் கால்வாயில் தேங்கியிருந்த நீல நிறத்திலான நீர் Sungai Kandis ஆற்றின் நீரோட்டத்தில் கலந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஆற்றிலிருந்து நீர் மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்காகவும் மேல் நடவடிக்கைக்காகவும் மலேசிய ரசாயனத்துறைக்கு அனுப்பப்பட்டது. நீர் வளத்திற்கு தூய்மைக் கேடு ஏற்படுத்தியது தொடர்பில் 1999ஆம் ஆண்டின் சிலாங்கூர் நீர் நிர்வாக ஆணையத்தின் சட்டத்தின் 79 ஆவது விதி, உட்பிரிவு (1) மற்றும் (c) யின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்த விவகாரம் தொடர்பில் சுற்று சூழல்துறை மற்றும் ஷா அலாம் மாநகர் மன்றம் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்திற்கு உட்பட நடவடிக்கையில் ஈடுபடும்படி Luas கேட்டுக்கொண்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!