Latestமலேசியா

ஷா ஆலாமில் RM2 மில்லியனுக்கும் கூடுதல் மதிப்புடைய பாலியல் பொம்மைகள் பறிமுதல்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5 – சிலாங்கூர், ஷா ஆலாமிலுள்ள, தளவாட கிடங்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை வாயிலாக, நாட்டிற்குள் கடத்தி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் “செக்ஸ்” அல்லது பாலியல் பொம்மைகளை, மத்திய மண்டலத்திற்கான அரச மலேசிய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 13-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட “ஒப்ஸ் பப்லிகா” எனும் சோதனை நடவடிக்கை வாயிலாக அந்த செக்ஸ் பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆயிரத்து 220 செக்ஸ் பொம்மைகளின் மொத்த மதிப்பு 20 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் ஆகும்.

இவ்வாண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பறிமுதல் அதுவென, மத்திய மண்டலத்திற்கான அரச மலேசிய சுங்கத் துறை துணை தலைமை இயக்குனர் நோர்லேலா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அந்த பறிமுதல் தொடர்பில், மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளர் என நம்பப்படும் 60 வயது ஆடவர் ஒருவரும் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

சிறார்களுக்கான விளையாட்டு பொம்மைகள் என போலியாக அறிவிக்கப்பட்டு அந்த பொம்மைகள் நாட்டிற்குள் தருவிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளதாக, நோர்லோலா சொன்னார்.

உள்நாட்டு சந்தையிலும், ஆன்லைன் வாயிலாகவும் விற்க ஏதுவாக, தடை செய்யப்பட்ட அந்த செக்ஸ் பொம்மைகள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!