பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் -22, பெட்டாலிங் ஜெயா, பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 36 வயது ஆடவர் 20 முறை கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதாகியுள்ளனர்.
உளவுப் பார்த்ததன் பலனாக, அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தி 50 முதல் 61 வயது வரையிலான மூவரைக் கைதுச் செய்ததாக, பெட்டாலிங் ஜெயா போலீஸ் துணைத் தலைவர் Supt M Hussin Sollehuddin Zolkifly தெரிவித்தார்.
மூவருமே ஒரே வீட்டில் தங்கியிருப்பவர்கள்; அவர்களில் ஒருவன் தான் அப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
Freelance உட்கட்டமைப்பு வடிவமைப்பாளரான ஆடவரின் வீட்டுக்கு கொள்ளையடிக்கச் சென்றவன், அந்த சமயம் பார்த்து அவ்வாடவர் திரும்பி வந்ததால் அவருடன் கைகலந்துள்ளான்.
அதன் போது கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு அவன் தப்பியோடினான்.
போதைப்பொருள் குற்றம் உட்பட மொத்தமாக 23 குற்றப்பதிவுகளைக் கொண்ட மூவரும் விசாரணைக்காக 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Persiaran Menanti-யில் தனியாக வசித்து வந்த அவ்வாடவர், திங்கட்கிழமை அதிகாலை வயிறு, கை மணிக்கட்டு, தலை உள்ளிட்ட இடங்களில் 20 கத்திக் குத்துக் காயங்களுடன் இறந்துகிடந்தார்.