Latestமலேசியா

ஹன்னா இயோ பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது நியாயமல்ல – தியோ நீ சிங்

கோலாலம்பூர், மே 29 – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான   Hannah Yeoh அமைச்சரவையிலிருந்து பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது  நியாயமல்ல என    DAP யின் மகளிர் பிரிவு தலைவி  Teo Nie Ching   தெரிவித்திருக்கிறார்.  அவர் அதிகாரத்தை தவறான பயன்படுத்தியுள்ளார் என விசாரணை நடத்தப்பட்டு உறுதியானால் மட்டுமே  விசாரணைக்கு உள்ளாக  வேண்டும்.  எந்தவொரு விசாரணைக்கும்  அவர் ஒத்துழைப்பார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது  நியாயம் அல்ல  என இன்று  நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்   Teo Nie Ching   தெரிவித்தார்.  

DRT எனப்படும்  சிலாங்கூரின்  பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தக்கூடிய    முன்னோடி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட  இரண்டு நிறுவனங்களில்  Asia  Mobility  Tecnologies Sdn Berhad டும் ஒன்றாகும். Hannah   Yeoh வின்  கணவர்  M. Ramachandran னின்   Asia Mobility Technologies  Sdn  Berhad  நிறுவனத்திற்கு   நேரடி பேச்சின் மூலம்  குத்தகை வழங்கப்பட்டது தொடர்பில்  அவர் பதவி விலக வேண்டுமென உரிமை கட்சியின் தலைவர் டாக்டர் பி.ராமசாமி  விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில்  கருத்துரைத்தபோது  Teo Nie Ching   இதனை தெரிவித்தார். 

 DAP தலைவரும், பினாங்கு   முதலமைச்சராகவும்  Lim Guan Eng இருந்தபோது  அவர் நீதிமன்றத்தில்  குற்றஞ்சாட்டப்பட்டார்.   அவர் பதவி விலக வேண்டும் என 15ஆண்டு காலம் பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சராக அப்போது  இருந்த  ராமசாமி ஏன் கோரிக்கை விடுக்கவில்லையென    Teo Nie ching  கேள்வி எழுப்பினார்.  இப்போது மட்டும் அவரது நிலையில்  ஏன் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  DAP யிலிருந்த வெளியேறிவிட்டதால்   Hanna Yeoh  பதவி துறக்க வேண்டும் என அவர் விரும்புகிறாரா என    Teo Nie Ching  கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பில் தற்காலிக  விசாரணை நடத்தியதாகவும்  எந்தவொரு தவறையும் தாங்கள் கண்டறியவில்லையென   MACCயின்   தலைமை ஆணையர்     Azam Baki  நேற்று தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!