Latestமலேசியா

ஹ்ரிதிக் ரோஷன் கலைநிகழ்ச்சி தடை விதிப்பீர்; பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

கோலாலம்பூர், நவ 23 – இதற்கு முன் ColdPlay இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஸ் கட்சி தற்போது ஹ்ரிதிக் ரோஷன் தலைமையிலான பாலிவுட் நட்சத்திரங்களின் “The Stars On Fire” கலை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. பாஸ் கட்சியின் பெரிக்காத்தான நேசனல் கூட்டணியின் கோலா கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீஃப் அப்துல் ரஹ்மான், “The Stars On Fire” நிகழ்ச்சியை ரத்துச் செய்ய வேண்டுமென அறைகூவல் விடுத்தார். பாலஸ்தீனத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நாட்டிலுள்ள மக்களில் பெரும்பாலோரின் உணர்வுகள் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய கலைநிகழ்ச்சிகள் இப்போதைக்கு பொருத்தமானதாக இல்லையென கோலாக கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் லத்தீஃப் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். ஹ்ரிதிக் ரோஷனின் கலைநிகழ்ச்சியை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சுக்கான 2024 பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டபோது லத்தீஃப் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!