Latestமலேசியா

அச்சிடும் முறையில் புதிய சகாப்தத்தை கொண்டு வருகிறது கேனான் மலேசியா

ஷா ஆலாம், மார்ச் 6 – கேனான் மார்க்கெட்டிங் மலேசியா, அதன் அண்மைய வெளியீடாக லேசர் பிரிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

“ஏ கிளாஸ் ஆப் எக்ஸலன்ஸ் வித் கேனான்” அறிமுகத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் அந்த லேசர் பிரிண்டர்கள், அச்சிடும் தொழில்நுட்பத்தில் மாபெரும் மைல் கல்லாகும்.

மேகா ரைஸ் மாலில் உள்ள, Oomph முகப்பில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், செயல்திறன், உற்பத்தி திறன் உட்பட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த லேசர் பிரிண்டர்கள் அறிமுகம் கண்டன.

குறிப்பாக, அதில் imageCLASS LBP243dw, LBP246dw, LBP248x, MF461dw, MF465dw, MF469x மற்றும் LBP732Cx ஆகியவையும் அடங்கும்.

நவீன பணியிடத்தில், எப்பொழுதும் மாறிவரும் தேவைக்கு, கேனானின் பதில் தான் அந்த புதிய லேசர் பிரிண்டர்கள்.

தொழில்துறைகளின் நடப்பு தேவைக்கு ஏற்ப அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு அந்த லேசர் பிரிண்டர்கள் மிக அணுக்கமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து தரப்பினரும் எதிர்கொள்ளும் சவால்களை அந்த லேசர் பிரிண்டர்கள் ஈடு செய்யும்.

இந்த லேசர் பிரிண்டர்களை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, அவற்றை சொந்தமாக அல்லது நேரடியாக பயன்படுத்தி பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

அதன் வாயிலாக, மேம்படுத்தப்பட்ட அச்சிடும் வேகம் முதல் தடையற்ற இணைப்பு வரை, பல்வேறு பணிகள் அல்லது தேவைகளுக்கு இந்த லேசர் பிரிண்டர்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது மீதான ஆழமான புரிதலையும் வாடிக்கையாளர்கள் பெற்றனர்.

இந்நிலையில், கேனான் மலேசியா தொடர்ந்து புத்தாக்க கண்டுபிடிப்புகளில், கேனான் மார்க்கெட்டிங் மலேசியா நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்துமென, அதன் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மசாடோ யோஷி தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.

கேனானின் புத்தாக்க பயணத்தில், முக்கியமான தருணம் இது எனவும் அவர் குறிப்பிட்டார்.

“கியோசி” அல்லது அனைவரின் நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் எனும் சித்தாந்தத்திற்கு ஏற்ப, எப்பொழுதும் முன்னோக்கி செல்வதற்கும், தொழில்திறையில் புதிய தரநிலைகளை அமைப்பதற்கும் கேனான் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் அர்ப்பணிப்புகளுக்கு இந்த்ஜ லோசர் பிரிண்டர்கள் தக்க சான்றாகும் எனவும் யோஷி சொன்னார்.

கேனானின் இந்த மிக அண்மைய தயாரிப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, my.canon/end/consumer/products எனும் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வரலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!