Latestமலேசியா

அன்வாருக்கு எதிரான நம்பிக்கை மோசடி தீர்மானம் ஏற்கப்படாது என்று எதிர்க்கட்சி கூறுவதா ? – பாமி சாடல்

கோலாலம்பூர், ஜன 12 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் அனுமதிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லையென எதிர்க்கட்சி கூறியிருப்பதை ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் பாமி பாட்சில் சாடினார். தமக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யும்படி கடந்த ஆண்டு இருமுறை எதிக்கட்சிக்கு அன்வார் அழைப்பு விடுத்திருந்ததாகவும் ஆனால் பெரிக்காத்தான் நேசனல் அப்படியொரு தீர்மானத்தை கொண்டு வரவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் ஃபத்லி ஷாரி மறந்துவிட்டதாக தெரிகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு இரண்டு வாரத்திலிருந்து மூன்று நாட்களை குறைப்பதாககூட அன்வார் முன் வந்ததையும் பாமி தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டவில்லை. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது தங்களது பலம் என்னவென்று அவர்களுக்கு தெரிந்ததே இதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் பாமி தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!