Latestமலேசியா

அன்வாரை ஆதரித்த 6 எம்.பிக்கள் இனியும் உறுப்பினர்கள் இல்லை சபாநாயகரிடம் பெர்சத்து தெரிவிக்கும்

கோலாலம்பூர், ஜூன் 12 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை ஆதரித்த தனது கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனியும் உறுப்பினர்கள் இல்லையையென நாடாளுமன்ற சபாநாயகருக்கு பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவிக்கவிருக்கிறார். கட்சியின் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் உடனடியாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்படும் என அவர் கூறினார். ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் நிலை குறித்து குறித்த அறிக்கைகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், என பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் தலைமைத்துவ மன்றத்திற்கு தலைமையேற்றபின் முஹிடின் இதனை தெரிவித்தார்.

புக்கிட் கந்தாங் எம்.பி சைட் அப்துல் உசேய்ன் (Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal), ஜெலி எம்.பி ஷஹரி கெச்சிக் (Zahari Kechik ), குவா மூசாங் எம்.பி அஸிஸி அபு நாயிம் ( Azizi Abu Naim ) ,கோலாகங்சார் எம்.பி இஸ்கந்தர் சுல்கர்னைன் அப்துல் காலிட் (Iskandar Dzulkarnain Abdul Khalid), லபுவான் எம்.பி சுஹாய்லி அப்துல் ரஹ்மான் ( Suhaili Abdul Rahman), மற்றும் தஞ்சோங் காரங் எம்.பி டாக்டர் சுல்கப்ரி ஹனாபி (Dr Zulkafperi Hanapi ) ஆகியோரே அந்த அறுவராவர்.

மேலும் சிலாங்கூர் மந்திரிபுசார் அமிருடின் ஷாரிக்கு (Amirudin Shari ) ஆதரவு தெரிவித்த செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷித் ஆசாரி (Abdul Rashid Asari ) மற்றும் கிளந்தானின் Nenggiri சட்டமன்ற உறுப்பினர் அஸீசி ( Azizi ) ஆகியோரும் பெர்சத்து கட்சியில் உறுப்பினர்கள் இல்லையென சிலாங்கூர் மற்றும் கிளந்தான் சட்டமன்ற சபாநாயகர்களுக்கு தெரிவிக்கப்படும். கட்சிக்கு விசுவாசமாக இருப்பதற்காக எழுத்துப்பூர்வமான உத்தரவுக்கு பதில் அளிக்கத் தவறியதால் அர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக முஹிடின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!