Latestமலேசியா

சீனப் புத்தாண்டு ஒப்ஸ் செலமாட் பாதுகாப்பு நடவடிக்கையில் உயிரிழப்பு விபத்துகள் குறைந்தன

கோலாலம்பூர், பிப் 17 – சீனப் புத்தாண்டு ஒப்ஸ் செலமாட் பாதுகாப்பு நடவடிக்கையில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துகள் குறைந்த போதிலும் வாகனம் ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்ட குற்றப்பதிவுகள் அல்லது சம்மன்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சீனப் புத்தாண்டு காலத்தின்போது நிகழ்ந்த விபத்துகளை ஒப்பிடுகையில் இவ்வாண்டு உயிரிழப்பு சம்பந்தப்பட்ட விபத்துகள் 9-ஆக குறைந்திருப்பதாக கூட்டரசு போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குனர் டத்தோ முகமட் அஸ்மான் அகமட் சப்ரி தெரிவித்தார். மொத்தம் 67 மரணங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்களில் 74 விழுக்காடு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் பின்னால் அமர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. பிப்ரவரி 13ஆம் தேதி முடிவுற்ற ஆறு நாள் ஒப்ஸ் செலமாட் நடவடிக்கையில் மொத்தம் 201,840 சம்மன்கள் வழங்கப்பட்டதாக முகமட் அஸ்மான் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!