Latestஉலகம்

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி Rosalynn Carter காலமானார்

வாஷிங்டன், நவ 20 – அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியும் , முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் துணைவியாருமான ரோசலின் கார்ட்டர் தமது 96 ஆவது வயதில் நேற்று காலமானார். ஜிம்மி கார்ட்டரின் பதவிக் காலத்தில் குறிப்பாக மனோநிலை ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் அவர் சளைக்காமல் பாடுபட்டு வந்தார் என கார்ட்டர் மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜிம்மி கார்ட்டர் 1977 ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டுவரை அமெரிக்க அதிபராக பணியாற்றியுள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னரும் தொடர்ந்து பல்வேறு சமூக நல நடவடிக்கையில் ரோசலின் தீவிரமாக கலந்துகொண்டு வந்தார்.

1946 ஆம் ஆண்டில் ஜிம்மி கார்ட்டர் 21 வயதாக இருந்தபோது 18 வயதுடைய ரோசலினை திருமணம் செய்துகொண்டார். வாழ்க்கையில் தமது உற்ற துணையாகவும் ஆதரவாளராகவும் ரோசலின் இருந்துள்ளதாக 99 வயதாகும் ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தார்.

தேவைப்படும்போதெல்லாம் அவர் தமக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருந்துள்ளதாக அந்த முன்னாள் அதிபர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!