Latestமலேசியா

ஹமாஸின் வெளிநாட்டு ஆதரவாளர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் அமெரிக்க மசோதாவை அரசாங்கம் கண்காணிக்கும்

கோலாலம்பூர், நவ 3 – ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய புனித போராளிகள் இயக்கத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பான மசோதாவை நிறைவேற்ற அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முடிவை அரசாங்கம் தற்போது கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்திருகிறார். அடுத்த கட்ட நடவடிக்க எடுப்பதற்கு முன் அந்த மசோதாவின் உள்ளடக்கம் முழுமையாக ஆராயப்படும் என அவர் கூறினார். பாலஸ்தீனத்தில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 8,700 க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர். இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மேலும், வீடுகளை இழந்த அல்லது இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 14 மில்லியன் தனிநபர்களை எட்டியுள்ளது, இது மிகவும் வருத்தமளிப்பதாக ஜாம்ப்ரி தெரிவித்தார்.

ஒருபுறம் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் நடைபெறுகின்றன, மறுபுறம் அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியைப் பின்பற்றவில்லை. மாறாக, அவர்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறார்கள், இந்த தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும், மனிதாபிமான உதவியை எளிதாக்குவதற்கான நடவடிக்கை மேலும் மோசம் அடைந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்றிரவு அரச தந்திர மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!