Latestமலேசியா

அமெரிக்காவில், ரோபோவின் பிழையால் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த பெண்; இழப்பீடு கோரி கணவர் வழக்கு

வாஷிங்டன், பிப்ரவரி 15 – அமெரிக்காவில், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் மரணத்திற்கு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரோபோ தான் காரணம் என கூறி ஆடவர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.

அறுவை சிகிச்சையின் போது, பிரச்சனைக்குரிய அந்த ரோபோவை பயப்படுத்திய, IS – Intuitive Surgical எனும் மருத்துவ நிறுவனத்திடம் இழப்பீடு கோரி, அவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சம்பந்தப்பட்ட ரோபோ மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் விளைவாக, ஹார்வி சுல்ட்சர் எனும் அவ்வாடவரின் மனைவி சாண்ட்ரா சுல்ட்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரோபோவிற்கு, மனிதர்களின் உள் உறுப்புகளை பாதிப்படையச் செய்யும் “இன்சுலேஷன்” பிரச்சனை இருப்பதும், அதனை சம்பந்தபட்ட நிறுவனம் தங்களிடமிருந்து மறைத்து விட்டதாகவும் ஹார்வி குற்றம்சாட்டியுள்ளார்.

அதனால், அந்நிறுவனம் தமக்கு 75 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது மூன்று லட்சத்து 58 எட்டாயிரத்து 725 ரிங்கிட் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் ஹார்வி கோரியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!