Latestஉலகம்

அமெரிக்காவில் வெயில் கொளுத்துகிறது; உருகி வரும் ஆப்ரஹாம் லிங்கனின் மெழுகுச் சிலை

வாஷிங்டன், ஜூன்-27, அமெரிக்காவில் கொளுத்தி வரும் வெயில், வாஷிங்டனில் உள்ள முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கனின் (Abraham Lincoln) மெழுகுச் சிலையையும் விட்டு வைக்கவில்லை.

அதீத வெப்பத்தால் அது உருகி வருகிறது.

ஒலிம்பியாவில் ஆரம்பப் பள்ளிக் கூடத்துக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள 6 அடி அச்சிலை, அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையைப் போலவே வடிவமைக்கப்பட்டதாகும்.

கடந்த பிப்ரவரியில் தான் அமெரிக்காவின் பிரபல கைவினைக் கலைஞர் சேண்டி வில்லியம்ஸ் (Sandy Williams) அதனை வடிவமைத்தார்.

இந்நிலையில் கடந்த வார இறுதியில் அங்கு வெப்ப நிலை 100 Fahrenheit அல்லது 37 பாகை செல்சியசாகப் பதிவாகி, முதலில் அச்சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக உருகியது.

தற்போது கால்கள் உருகி வருகின்றன.

அம்மெழுகுச் சிலை 140 Fahrenheit அல்லது 60 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் தன்மையுடையது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது உருகி வரும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அண்மைய காலமாக அதீத வெப்பம் வாட்டி வருகிறது.

இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டும் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!