Latestஉலகம்

அமெரிக்காவில், 2 வேட்டைக்காரர்கள் உயிரிழந்ததற்கு ‘ஜோம்பி மான்’ நோய் தான் காரணமா? ; அறிவியலாளர்கள் அதிர்ச்சி

டெக்சாஸ், ஏப்ரல் 23 – அமெரிக்காவில், ‘ஜோம்பி மான்’ நோயுடன் தொடர்புடையது என நம்பப்படும், இரு வேட்டைக்காரர்களின் மரணம் குறித்து அறிவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

CWD எனப்படும் ஜோம்பி மான் நோயால் பாதிக்கப்பட்ட மான் இறைச்சியை சாப்பிட்டதால் அவர்கள், உயிரிழந்தனர்.

விலங்குகளிடம் காணப்படும் நரம்பியல் பாதிப்புகள் அவர்களிடம் தென்பட்டதால், CWD நோய் மான்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கக்கூடும் என்ற கவலையை அது ஏற்படுத்தியுள்ளது.

CWD நோய், மனிதர்களின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, உமிழ்நீர் சுரப்பு, சோம்பல், சுயநினைவு இழந்தல் உட்பட உடல் மெலிந்து உயிரிழக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.

2022-ஆம் ஆண்டு அந்த இரு வேட்டைக்காரர்களும் உயிரிழந்ததை அடுத்து, சான் அன்டோனியோவிலுள்ள, டெக்சாஸ் பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையம் மேற்கொண்ட ஆய்வில், CWD அல்லது ஜோம்பி மான் நோய், ஏற்கனவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் 72 வயது ஆடவர். சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அது பலனின்றி ஒரு மாதக் காலத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இறப்பதற்கு முன், அவர் குழப்பமாக காணப்பட்டதோடு, முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல, அவரது நண்பரும் நரப்பியல் பாதிப்புகளுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

CWD அல்லது “ஜோம்பி மான்” நோய் மிகவும் ஆபத்தானது. இதுவரை, அந்நோயை குணப்படுத்த சிகிச்சையோ, தடுப்பூசியோ எதுவும் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!