Latestஉலகம்

அமெரிக்க உடற்பயிற்சி நிலையத்தில் இந்திய மாணவர் கத்தியால் குத்தப்பட்டார்

வாஷிங்டன் , நவ 1- அமெரிக்காவின் இந்தியானா (Indiana) மாநிலத்தில் கத்தியால் குத்தப்பட்ட 24 வயதுடைய இந்திய மாணவர் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியானா சிட்டி நகரிலுள்ள உடற்பயிற்சி மையத்தில் வருண் என்ற அந்த மாணவரை 24 வயதுடைய ஜோர்டன் ஆண்ட்ரேட் என்பவர் கத்தியில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் வால்பரைசோ (Valparaiso) நகரிலுள்ள பொது உடற்பயிற்சி நிலையத்தில் இந்த சம்பவம் நடந்தது. இம்சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வருணை குத்திய ஜோர்டன் ஆண்ட்ரேட் கைது செய்யப்பட்டதோடு அந்த நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!