Latestமலேசியா

அம்பாங்கில் 7 வயது சிறுவன் வீட்டில் மரணம்; சித்ரவதை சந்தேகத்தின் பேரில் தாயும் காதலனும் கைது

கோலாலம்பூர், ஜனவரி-12, தாமான் புக்கிட் அம்பாங்கில் சித்ரவதைக்கு ஆளாகி 7 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், தாயும் அவரின் காதலனும் கைதாகியுள்ளனர்.

தூங்கிக் கொண்டிருந்த மகன் மூச்சு விடவில்லை என அப்பெண் முன்னதாக அம்புலன்ஸ் வண்டிக்கு அழைத்துள்ளார்.

எனினும் பின்னர் சிறுவனின் முகம், கழுத்து, கைக் கால்களில் காயங்கள் இருந்ததை மருத்துவக் குழு கண்டுபிடித்தது.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையிலும், தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவே சிறுவனின் மரணத்துக்குக் காரணம் என உறுதியானது.

கூர்மையற்ற ஆயுதத்தால் சிறுவன் சரமாரியாகத் தாக்கப்பட்டிருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் ACP Mohd Azam Ismail தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் விசாரணைக்காக 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!