Latestமலேசியா

அம்பாங் ஜெயாவில் போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காக மாற்றப்பட்ட கடை வீடு; 8 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

கோலாலம்பூர், ஆகஸ்ட் -22, மலேசிய போலீசும் ஆஸ்திரேலிய போலீசும் இணைந்து அம்பாங் ஜெயாவில் உள்ள ஒரு கடை வீட்டைச் சோதனையிட்டதில், 883,093 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகைப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அவற்றின் எடை 25 கிலோ கிராமுக்கும் கூடுதலாக இருக்கலாமெனக் கூறப்படுகிறது.

அக்கடை வீடு, குடியிருக்க எனக் கூறி வாடகைக்கு எடுக்கப்பட்டு பின்னர் போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காக மாற்றப்பட்டதாகும்.

‘அக்கிடங்கிலிருந்து’ தான் கொரியர் மூலமாக போதைப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அக்கிடங்கு செயல்பட்டு வந்துள்ளது.

சோதனையின் போது கைதான வெளிநாட்டு ஆடவர் விசாரணைக்காக 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அக்கும்பலைச் சேர்ந்த எஞ்சியர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வு இறங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!